Princiya Dixci / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
இலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் ஷஷி வெலகம மற்றும் உதிரிப்பாக விநியோகஸ்தரான நந்தன பிரியந்த ஆகியோரை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜே. ட்ரொஸ்கி, நேற்று (06) உத்தரவிட்டார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையில் இடம்பெற்ற 125 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட வெல்கம, நேற்று (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
முதலாவது சந்தேகநபரான நந்தன பிரியந்தவுக்கு, 2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் உதிரிப்பாக விநியோகத்துக்காக, இ.போ.ச அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, மூன்று தடவைகளில், போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அதற்கமைய, அவ்வாறு வழங்கப்பட்ட போலி ஆவணங்களை ஒப்புதலளித்து, இ.போ.சவின் நிதிப் பிரிவினூடாக பணம் வழங்க 2ஆவது சந்தேக நபரான இ.போ.சவின் முன்னாள் தலைவர் ஷஷி வெலகம உடந்தையாக இருந்துள்ளதாக முறைப்பாட்டாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2ஆவது சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான கலிங்க இந்திர திஸ்ஸ, தனது தரப்புக்கார், இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும் அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டு அவருக்குப் பிணை வழங்குமாறு, ஜனவரி 5ஆம் திகதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
2 hours ago