Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்பத்து தேசிய வனாந்தரம் அழிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின், அடுத்த தவணை விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், இன்று (22) இடம்பெறவுள்ளது.
அந்த வனாந்தரத்தில் விளாத்திக்குளம் காட்டுப்பகுதி அழிக்கப்பட்டு, அங்கு சட்டவிரோதமான குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சா ட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், வில்பத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் காடழிப்புக் குறித்து மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இந்தப் பிரச்சினை சூழல் பிரச்சினையாக மாத்திரமன்றி, ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால், அரசாங்கம் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என, நாமல் ராஜபக்ஷ, கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, வில்பத்துக் காடழிப்புக்கு எதிராகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதாக, “வில்பத்துவைப் பாதுகாப்போம்” அமைப்புக் கூறியுள்ளது.
3 minute ago
36 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
36 minute ago
46 minute ago
59 minute ago