2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உல்லாசமான வீடியோவை தரவேற்றிய காதலன் கைது

Princiya Dixci   / 2016 மே 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்        
      
நீண்டநாள், காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை, முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) தரவேற்றம் செய்த காதலனை பொலிஸார் கைதுசெய்த சம்பவமொன்று, சேருநுவர பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கும் யுவதிக்கும் பாடசாலை காலத்தில் இருந்தே காதல் மலர்ந்துள்ளது. இவ்விருவரும் தங்களுடைய வீடுகளுக்குத் தெரியாமல் வெளியில் சுற்றிதிரிந்துள்ளனர்.
அவ்வப்போது செல்கின்ற போதெல்லாம் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில், காதலன் தனது அலைபேசியின் ஊடாக, காதலிக்குத் தெரியாமல் அதனை ஒளிப்பதிவு செய்துகொண்டதுடன், படங்களையும் பிடித்துகொண்டுள்ளார். 

இந்நிலையில், தங்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, இரு வீட்டாருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 

முரண்பாடுகள் தொடர்ந்துகொண்டே சென்றமையால், அவ்விளைஞன், தன்வசமிருந்த அந்த வீடியோவையும், புகைப்படங்களையும் முகப்புத்தகத்தில் தரவேற்றம் செய்துவிட்டான்.

விடயத்தை அறிந்துகொண்ட காதலி, சம்பவம்தொடர்பில் சேருநுவர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அம்முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவருடைய காதலனைக் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X