Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கீரிமலை, நல்லிணக்கபுரம் பகுதியில் சனிக்கிழமை, காணாமல் போன கஜேந்திரகுமார் கஜீபன் (வயது 10) என்றச் சிறுவன், நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில், சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளான்.
நேற்று மாலை, தனது வீட்டில் இருந்து அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்ற சிறுவன், காணாமல் போயுள்ளான். இந்நிலையில், பாழடைந்த தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நீர்த்தொட்டி, ஆரம்ப காலத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வாகனங்களை சுத்தரிகரிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்ததாகவும், அது தற்போது கைவிடப்பட்டிருந்த நிலையில், மழை நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
2 minute ago
50 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
50 minute ago
59 minute ago
2 hours ago