Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். சபேசன், நடராஜன் ஹரன், எஸ். கார்த்திகேசு
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியில் கணவனால் மனைவி தீ வைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், இன்று வெள்ளிக்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்தறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
காரைதீவு வெட்டடுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணான மொறிஸ் மெரினா (வயது 31) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் இப்பெண்ணின் கணவரான குகதாசன் (வயது 32) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கமே இக்கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்த சம்மாந்தறைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025