Kanagaraj / 2016 மே 24 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களின் மலசலகூடத்தில் சி.சி.டி.வி கமெராவைப் பொருத்தி, தனது அறையிலிருந்து அதனை இயக்கி நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்வதற்கு ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பிரதான நீதவான் ஹர்ஷன கெக்குனவலவே, சட்டமா அதிபரிடம் மேற்கண்டவாறு ஆலோசனை கோரியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அநுராதபுரம் வைத்தியசாலையில், கணக்குப்பிரிவில் கடமையாற்றும் பெண்கள் செல்கின்ற மலசலகூடத்துக்குள் சி.சி.டி.வி கமெராவைப் பொருத்தி, அக்கமெராவை தன்னுடைய அறையிலிருந்து இயக்கி, சந்தேகநபரான அந்த வைத்தியர் கண்காணித்துள்ளார்.
இது தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு ஆலோசனையை கோரியுள்ளார்.
இதேவேளை, குறித்த சந்தேகநபரான வைத்தியர் தொடர்பில், வைத்தியசாலையில் உள்ளக விசாரணையொன்றும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago