2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

பணமோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கொழும்பு, ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனின் பெயரைக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நால்வரை அலவத்துகொடை பொலிஸார் செவ்வாய்க்கிழமை(20) கைதுசெய்துள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

பேச்சாற்றல் மற்றும் செவிப்புலனற்ற நிலையிலுள்ள இச்சிறுவனைக் குணப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகக் கூறி, மேற்படி நால்வரும் போலிப் பற்றுச்சீட்டுக்களைத் தயார்செய்துள்ளதுடன் அதனை 50 ரூபாய் வீதம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

அலவத்துகொடை நகரில் வைத்து மேற்படி பற்றுச்சீட்டுக்களை விற்பனை செய்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியையும் ஒருதொகை டிக்கெட் புத்தகங்கள், பணம், இறப்பர் முத்திரை என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X