Editorial / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டிய 12 பேர் நேற்று (3) பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ளனர்.
இதற்கமைய தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய-நாவுல பிரதேசத்தில் நேற்று (3) மாலை 6.15 மணியளவில் புதையல் தோண்டிய நால்வர் தம்புள்ளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புள்ளை,ஹெம்மாத்தகம பகுதிகளைச் சேர்ந்த 35,49,51,55 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம் (4) தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலஒயகம பிரதேசத்தில் நேற்று (3) இரவு 7.55 மணியளவில் புதையல் தோண்டிய 8 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பதுரலிய,கடவத்தை,ஆதாஉல்பத்த,ரிதிமாலியத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 41.42,44,48,55,60 வயதானவர்கள் என்றும் இவர்களை இன்று (4) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
15 Nov 2025
15 Nov 2025