Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்கொடை பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண்ணொருவர், தொம்பே, பன்வல பகுதியில் புதன்கிழமை மாலை 5 மணியளவில், மோட்டார் சைக்கிளை செலுத்திசென்றபோது, மதிலொன்று அந்த மோட்டார் சைக்கிள் மீது இடிந்து விழுந்ததில் அப்பெண் உயிரிழந்துள்ளார்.
பாலத்துடன் மோதிய சாரதி பலி
கிரிமெடியான பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபரொருவர், நாத்தாண்டிய பகுதிலிருந்து தங்கொடுவை நோக்கி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றுகொண்டிருந்த போது, அந்த மோட்டார் சைக்கிள் தனது கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பாலத்துடன் புதன்கிழமை காலை 11 மணியளவில், மோதி விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் மோதி பாதசாரி பலி
மினுவங்கொடை பழைய பஸ்தரிப்பிடத்திலிருந்து புதிய பஸ்தரிப்பிடம் நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்று புதிய பஸ்தரிப்பிடத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 70 வயதான பாதசாரியொருவரை புதன்கிழமை (09) பிற்பகல் 2.50க்கு மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
பாதசாரி அடையாளம் காணப்படவில்லை என்றும், கம்பஹா வைத்தியசாலையின் சவச்சாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோய்ன் வைத்திருந்தவர்கள் கைது
களனிப் பகுதியில் 5 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த 50 வயதானவரை புதன்கிழமை(09) மாலை 5.30க்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மூலம்: பொலிஸ் ஊடகப்பிரிவு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago