2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாக். பிரஜையின் வயிற்றில் ரூ.60 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் வில்லைகள்

Menaka Mookandi   / 2012 ஜூன் 27 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் வைத்து ஒப்பந்தக்காரர்களிடம் கையளிப்பதற்காக பாகிஸ்தான் பிரஜை ஒருவரினால் கொண்டுவரப்பட்ட 61 ஹெரோயின் வில்லைகளை அவரது வயிற்றிலிருந்து வெளியேற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த ஹெரோயின் வில்லைகளை விழுங்கியவாறு மேற்படி பாகிஸ்தான் பிரஜை இலங்கை வந்தடைந்த நிலையில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி ஹெரோயின் வில்லைகள் வெளியேற்றப்பட்டுள்ளன.
 
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .