2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ஹெரோயின் பாவனையில் ஈடுபட்டவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                           (எஸ்.மாறன்)
அம்பாறை, நகவம்புர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து பொலிஸார் நகவம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது ஹெரோயினை பாவித்துக்கொண்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து 2 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக அம்பாரை நகரப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நேற்று (13) புதன்கிழமை அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்த போது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அம்பாரை நகர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X