2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தோஷம் இருப்பதாகக்கூறி 16 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மந்திரவாதி கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

திஸ்ஸமகாராம பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு மந்திரம் செய்வதற்காகச் சென்ற மந்திரவாதி ஒருவர், அங்குள்ள 16 வயது சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும் அவருக்கு குறி மந்திரம் செய்ய வேண்டும் எனவும் கூறி, சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெடிய பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், திஸ்ஸமகாராம பிரதேசத்தின் அதே கிராமத்தின் வேறொரு வீட்டில் மந்திரம் செய்ய வந்ததை அடுத்து பொலிஸிற்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .