2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

விபசார குற்றச்சாட்டு: 18 சந்தேக நபர்களுக்கு பிணை

Super User   / 2012 ஜூன் 08 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        (லக்மால் சூரியகொட)

கொழும்பில் இரவுவிடுதி என்ற பெயரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 8 பெண்கள் உட்பட 18  சந்தேக நபர்கள் பிணையில் செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று அனுமதித்தார்.

கடந்த 12 வருடங்களாக அப்பகுதியில் இயங்கிவந்த கரோகே விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டதாக நீதவான் கனிஷ்க விஜேரட்னவிடம் பிரதிவாதிகள் தரப்பு வழக்குரைஞர் அசேல ரேக்காவ தெரிவித்தார். இச்சந்தேக நபர்கள் விபசார விடுதியை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அவர் கூறினார்.

'அது ஆண்கள் மது அருந்துவதற்காக வரும் இடம்.  வாடிக்கையாளர்களுக்கு மது பரிமாறும் பெண்களுடன் அவர்கள் நடனமும் ஆடுவார்கள். இவைதான் இந்த கரோகே விடுதியின் பிரதான செயற்பாடுகளாகும்' என அசேல ரேக்காவ கூறினார்.

இரவு விடுதி என்ற பெயரில் விபசாரவிடுதி நடத்துவதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தன் அடிப்படையில் முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக  கோட்டை பொலிஸ் நிலைய உதவி இன்ஸ்பெக்டர் சதுரங்க கூறினார். விபசாரம் இடம்பெறும் பல அறைகளை புலனாய்வாளர்கள் இனங்கண்டதாகவும் அவர் கூறினார்.

மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பெண்ணொருவரின் சேவையைப் பெறுவதற்கு 5000 ரூபாவை செலுத்தியதாகவும் அப்பெண்ணை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற அவர் ஏனைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு தகவல் கொடுத்தாகவும் உதவி இன்ஸ்பெக்டர் சதுரங்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X