2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள், ஆட்கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருகோடியே 44 லட்சம் ரூபாவுடன் கைது

Super User   / 2012 ஜூன் 28 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                               (கே.என். முனாஷா)

சர்வதேச போதைப் பொருள் வியாபாரம் மற்றும் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தலுடன் தொடர்புடைய நபருக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் ஒரு கோடியே 44 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா பணத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேக நபர் நீர்கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா யு. ஜயசூரிய உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு - கொச்சிக்கடை ஏத்தகால பிரதேச்தை சேர்ந்த இச்சந்தேக நபரை குற்றப்புலனாய்வு திணைக்களப் பொலிஸார் கைது செய்த போது சந்தேக நபரின் வீட்டு கட்டிலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்பணம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இவர் கடற்படையை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .