2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யாழில் கடந்த வாரம் 7 திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன

Kogilavani   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 7 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவங்களினால் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்;று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யாழில் கடந்த வாரம் வீடு மற்றும் கடை உடைப்பு திருட்டுச்சம்பவங்கள் தொடர்பில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுமார் 1,249,000 பெறுமதியான பொருட்களும் மற்றும் பணமும்; திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இத்திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இச்சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .