2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தை கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 27 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் சிறுமியின் சிறிய தந்தை ஒருவரை மாஹோ பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மாஹோ, சிவதாகம எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸ் விஷேட தொலைபேசி இலக்கமான 119ற்கு கிடைக்கப்பெற்ற தகவலினையடுத்தே சந்தேக நபரான சிறுமியின் சிறிய தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 60 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்டு வரும் மாஹோ பொலிசார் சந்தேக நபரை மாஹோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .