2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் வீரர் கொலை விவகாரம்; இருவர் கைது; இங்கிலாந்து மனைவிக்கு வலைவீச்சு

Menaka Mookandi   / 2012 ஜூன் 06 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட கிரிக்கெட் வீரர் ஒருவரின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதான இரு சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன் (வயது 28) என்ற கிரிக்கெட் வீரரே கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டவராவார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன – தமிழ்மிரருக்கு தகவல் தருகையில்,

"குறித்த கிரிக்கெட் வீரரின் படுகொலைச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய குற்றப்புலனாய்வுப் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதான இரு சந்தேகநபர்களை இன்று புதன்கிழமை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், 30 வயதான விமானியொருவராவார். மேற்படி விமானி, இங்கிலாந்துக்குச் சென்றிருந்த போது அங்கு தங்கியிருந்த கிரிக்கெட் வீரரின் மனைவியுடன் ஏற்பட்டிருந்த கள்ளத் தொடர்பே இந்த படுகொலைக்கு காரணம் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த கிரிக்கெட் வீரரை படுகொலை செய்வதற்காக மேற்படி விமானியினால் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரிடம் 1750 பவுண் கூலி கொடுக்கப்பட்ட நிலையிலேயே படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விமானியையும், அவருக்கு உதவி செய்த கூலிப்படையைச் சேர்ந்தவரையும் கைது செய்துள்ளனர். இங்கிலாந்திலுள்ள கிரிக்கெட் வீரரின் மனைவியைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X