2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையர் பலி

Menaka Mookandi   / 2012 ஜூன் 07 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹக்மன, புஹுல்வெல்ல பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் சுனில் சாந்த (வயது 46) என்ற நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி வீட்டில் கொள்ளையிட முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் மீது வீட்டு உரிமையாளர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை பிடிப்பதற்காக அந்த வீட்டின் உரிமையாளர் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தியதை அடுத்து அவர்களிருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது உரிமையாளரின் கையிலிருந்த துப்பாக்கி தற்செயலாக வெடித்ததிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரென நீண்ட காலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவரென பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X