2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட பெருமளவு மரக்கம்புகளுடன் ஆறுபேர் கைது

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, உன்னிச்சை காட்டுப்பகுதியில் வெட்டப்பட்டு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 375 மரக்கம்புகளை மாவட்ட வன அதிகாரிகள் கைப்பற்றியதுடன் ஆறுபேரை கைது செய்துள்ளனர்.

வவுணதீவு பிரதேசத்தில் வைத்து இம் மரக்கம்புகள் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட உதவி வன அதிகாரி உம்.ஏ.நபீஸ் தெரிவித்தார். முதிரை, விண்ணாங்கு, காயான் உட்பட பலவகை மரங்களிலிருந்து இக்கம்புகள் வெட்டப்பட்டுள்ளன.

மரக்கம்புகளைக் கடத்திவர பயன்படுத்திய மூன்று உழவு இயந்திரங்களையும் வன அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட வன அதிகாரி எம்.குணதிலக்க தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X