2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ஆயுள்தண்டனைக் கைதியின் உடலிலிருந்து ஹொரோயின் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 10 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (சீ.எம்.ரிஃபாத்)

ஆயுள்தண்டனைக் கைதியொருவரின் உடம்பினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த  ஐந்து கிராம் ஹெரோயின்  போதைப்பொருளை  நேற்று சனிக்கிழமை இரவு கண்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி, போகம்பரை சிறைச்சாலையிலுள்ள ஆயுட்தண்டனைக் கைதியொருவரே தனது மலவாயிலில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்துவைத்திருந்துள்ளார்.

வழக்கு விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் மீண்டும் போகம்பரை சிறைச்சாலைக்கு  அழைத்துவரப்பட்டபோது,  கைதியொருவரிடம் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கண்டி நீதவானின் அனுமதியுடன் பொலிஸார் போகம்பரை  சிறைச்சாலையில் சந்தேகத்திற்குரிய இரு கைதிகளை சோதனைக்கு உட்படுத்தியபோது கைதியொருவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X