2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ரகசிய பொலிஸார் எனக் கூறி ரயிலில் கொள்ளை; மூவர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 11 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரகசிய பொலிஸார் என தங்களை அறிமுகம் செய்துகொண்ட இளைஞர்கள் மூவர், கண்டி – மாத்தளை நோக்கிப் பயணிக்கும் ரயில் பயணிகளிடம் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பயணிகளிடமிருந்து பணம், கையடக்கத் தொலைபேசி போன்றவற்றை இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கட்டுகஸ்தொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய மேற்படி சந்தேக நபர்கள் மூவரும் விசேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X