2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 ஜூன் 12 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   ( சீ.எம். ரிஃபாத்)
11 வயதான சிறுமி ஒருவரை  பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயாரும் கண்டி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைபாடு செய்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கண்டி-அம்பிட்டிய பாதையிலுள்ள பொலிஸ் காவலரணில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்ததையடுத்து, அவர் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் மேற்படி சந்தேகநபரை நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்து கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்தபேது நீதவான் சந்தேநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதவான் உத்தரிவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X