2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

போதைப்பொருளுடன் நைஜீரிய பிரஜைகள் நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் நைஜீரிய நாட்டவர்கள் நால்வரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பதி இன்று தெரிவித்தார். சந்தேக நபர்கள் நீர்கொழும்பு -  கட்டுவ வீதி  ஏத்துக்கால பிரதேச வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீசா இன்றி நாட்டில் தங்யிருப்போரை கண்டு பிடிப்பதற்காக ஏத்துக்காகல உல்லாசப் பயணத்துறை பொலிஸார் நேற்று மாலை திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது இவர்கள் கைது செய்யபபட்டுள்ளனர்.

இவர்கள் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பிறகு நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயினும் 44 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து தபால் மூலமாக இந்த போதைப் பொருள் இலங்கைக்கு கடத்திவரப்பட்டுள்ளது என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X