2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சிறுமியை கடத்தி தோடு களவாடிய சந்தேகநபர்கள்

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

கந்தரோடைப் பகுதியில் இனம் தெரியாதவர்களினால் கடத்திச்செல்லப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சிறுமியொருவர் பொதுமக்களால் மீட்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை காலை வீட்டின் முன்னால் நின்று பல் தீட்டிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி, வானில் வந்தவர்களினால் கடத்திச்செல்லப்பட்டு கைகால்கள் கட்டிய நிலையில் அருளானந்தப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் பொது மக்களினால் மீட்க்கப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட சிறுமியின் காதில் இருந்து ஒரு சோடி தோடுகள் களவாடப்பட்ட நிலையில் சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து குறித்த சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X