2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சிஐடி என கூறிக்கொண்டு பெண்ணிடம் பணம் வசூலிக்க முற்பட்ட நபர்கள் கைது

Super User   / 2012 ஜூன் 12 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (சுபுன் டயஸ்)

பம்பலப்பிட்டி தொடர்மாடியில் வசிக்கும் தமிழ் பெண்ணொருவரிடமிருந்து 25,000 ரூபா கப்பம் வசூலிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவை (சி.ஐ.டி) சேர்ந்தவர்கள் எனக்கூறிக்கொண்டு, இச்சந்தேக நபர்கள் மேற்படி பெண்ணிடம் பணம் வசூலிக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பணம் வழங்காவிட்டால் அப்பெண்ணையும் அவரின் மகளையும் கைது செய்யப்போவதாக சந்தேக நபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு தகவல்கொடுக்கப்பட்டது.  இரு தரப்பினரும் தமது பேரத்தை முடித்துக்கொள்வதற்காக குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது அங்கு மறைந்திருந்த கொழும்பு குற்றவியல் பிரிவு அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X