2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சிகிச்சைக்கு வந்த நோயாளியின் தங்க ஆபரணங்கள் திருட்டு

Kogilavani   / 2012 ஜூன் 13 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டானியல்)
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளர் ஒருவரின் கைப் பையில் இருந்த தங்க ஆபரணங்கள் இன்று புதன்கிழமை திருடப்பட்டுள்ளமை தொடர்பில் வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் முறையிடப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு அதிகாரி றுவன் சென்ரவ தெரிவித்தார்.

இவ் வைத்தியசாலையில் அதிகரிக்கப்பட்டுள்ள திருட்டுச் சம்பவங்களால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரும் துன்பங்களை அனுபவிப்பதாகவும் இந்த திருட்டை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்.வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் தங்க ஆபரணங்களை அணிந்துக் கொண்டு வரவேண்டாம் எனவும் தங்களது உடமைகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு அதிகாரி மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X