2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பூசகரிடம் கப்பம் பெற முயற்சித்த சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியளில்

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     (ஆர்.கமலி)
இறக்குவானை நகரில் கோயில் பூசகர் ஒரவரிடம் கப்பம் கோரி தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு சந்தேக நபர்களையும் நேற்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து  எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பூசகரிடம் இரண்டரை இலட்சம் ரூபா கப்பம் பெற்றிருந்ததுடன் மேலும் 30 இலட்சம் ரூபா கப்பம் கோரி தொலைப்பேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக கடந்த 8 ஆம் திகதி இறக்குவானை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்து பெல்மதுளை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X