2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை

Super User   / 2012 ஜூன் 14 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              (ரி.பாருக் தாஜுதீன்)

போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

உம்மலி வேலாயுதன் சுனில் லால் எனும் இந்நபருக்கு மேல்நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன மரண தண்டனை விதித்ததுடன் குற்றம் சுமத்தப்பட்ட தம்மிக தர்மரட்ணம் என்பவரை விடுதலை செய்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாவது நபரின் பாவனைக்காக, குற்றஞ்சாட்டப்பட்ட முதலாவது நபர் இந்தியாவிலிருந்து மா அரைக்கும் இயந்திரமொன்றை இறக்குமதி செய்தாக வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த இயந்திரம், கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தபோது,  அதன்மூலம் முதலாவது நபர் போதைப்பொருள் கடத்துவதாக போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்தது.

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அறிவுறுத்தலின்பேரில், இந்த இயந்திரத்தை எடுத்துச் செல்ல வருமாறு துறைமுக அதிகாரிகள் குற்றம்சுமத்ப்பட்ட நபருக்கு அறிவித்தனர்.

24.04.2004 ஆம் திகதி, இரு நபர்களும் இயந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வந்தனர். அப்போது போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள், மேற்படி இயந்திரம் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை திறந்து இயந்திரத்தை பரிசோதித்தபோது, அதற்குள் 2254.1 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இவ்வழக்கின்போது தெரிவிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X