2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கரடியனாறில் புதையல் தோண்டிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 15 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருட்டு மானோடைப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் 4 பேரை மாவடியோடைப் படையினர் கைதுசெய்து நேற்று வியாழக்கிழமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சந்தேக நபர்கள்  காட்டுக்குள் பதுங்கியிருந்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதை அவதானித்த படையினர் உடனடியாக இவர்களைக் கைதுசெய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மேலும் 4 பேர் தப்பியோடியதாக  படையினர் தெரிவித்தனர்.

இவர்கள் புதையல் தோண்டிய இடத்திலிருந்து பசுநெய், தேங்காய் எண்ணெய், சாம்பிராணி, பழங்கள், விளக்கு, நூல் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X