2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

விற்பனைக்கு தங்கமுலாம் பூசிய செப்பு உருண்டைகளை கொண்டுசென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 19 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்,ஜூட் சமந்த)

விற்பனை செய்வதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட செப்பு உருண்டைகளையும்  நிஜமான தங்க உருண்டைகளையும் கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் இருவரை  சாலியவெவ பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து   தங்கமுலாம் பூசப்பட்ட சுமார் 820 செப்பு உருண்டைகளும்  3 நிஜமான தங்க உருண்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாலியவெவ நகர் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றை இடைமறித்து சோதனையிட்டபோது அதில் இருவர் மதுபோதையில் காணப்பட்டதாகவும் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியிலிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட செப்பு உருண்டைகளும்  நிஜமான தங்க உருண்டைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

நிஜமான தங்க உருண்டைகளை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து பேரம் பேசிய பின்னர் போலியான உருண்டைகளை விற்பனை செய்வதாக இச்சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைப்பற்றப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட செப்பு உருண்டைகள் மற்றும்  நிஜமான தங்க உருண்டைகளுடன் இச்சந்தேக நபர்கள் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X