2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தளுவ பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 20 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்,ஜூட் சமந்த)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவ பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டதுடன், இருவர்  புத்தளம் விசேட  அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த  சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்ட வேளையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.  இதன்போது 200 கசிப்பு போத்தல்களுடன் கசிப்பு உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் 200,000 டிரேம் கோடா, செப்புக்கம்பிகள், பெரும் எண்ணிக்கையான பரல்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம் விசேட அதிரடிப்படை முகாமின் உத்தரவிடும் அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.பி.வசந்த பெரேராவின் மேற்பார்வையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X