2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மட்டு. பெரிய கல்லாறில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 25 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  

                                                                                                   (ஜதுசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறு தபாலகத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம்  இன்று திங்கட்கிழமை காலை களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பண்டாரகமவைச் சேர்ந்த மருதமுனையிலுள்ள அரிசி ஆலையொன்றில் பணியாற்றும் ஹெவகே குமுது பெரேரா (வயது 35) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சடலத்தின் தலைப்பகுதியில்  பலத்த காயம் காணப்படுவதாகத் தெரிவித்த களுவாஞ்சிக்குடி பொலிஸார், இச்சடலத்திற்கு அருகிலிருந்து ஆயுதங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசியொன்றும்  கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினர்.

இவர் பெரிய கல்லாறைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் முடித்து அங்கு வசித்துவருவதாகவும் பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. 

சடலத்திற்கு அருகிலிருந்து  கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியின் உதவியுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .