2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹெரோயின் வில்லைகளை விழுங்கிவந்த பாக். பிரஜை விமான நிலையத்தில் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 25 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருள் வில்லைகளை விழுங்கியவாறு அவற்றை இலங்கைக்கு கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து வந்த விமானத்திலேயே மேற்படி சந்தேகநபர் வந்தள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது வயிற்றிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் வில்லைகள் 20 வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சில வில்லைகள் அவரது வயிற்றில் இருப்பதாகவும் அவற்றை வெளியில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை வைத்தியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .