2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

போலி யூரோ நாணயத்தாள்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 25 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

போலி யூரோ நாணயத்தாள்களைப் பயன்படுத்தி நகைக் கொள்வனவில் ஈடுபட முயற்சித்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகைக்கடையொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி இரு சந்தேகநபர்களிடமிருந்து 21 போலி யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், இவர்களிடமிருந்து கெப் ரக வாகனமொன்றையும் கைப்பற்றிய பொலிஸார், சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் போலி நாணயத்தாள் விசாரணைப் பிரிவிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .