2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வர்த்தகர்களிடம் கப்பம் கோரி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நால்வருக்கு விளக்கமறியல்

Super User   / 2012 ஜூன் 25 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (ரி.பாருக் தாஜுதீன்)

வெலிக்கடை பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களிடம் கப்பம் கோரி அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட நால்வரை ஜூலை 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி  அல்விஸ் இன்று உத்தரவிட்டார்.

இக்குழுவினர் வெலிக்கடை பிரதேச வர்த்தகர்களிடம் கப்பம்கோரி அவர்களை அச்சுறுத்தி வந்ததாக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் விஜிதானந்த, நீதிமன்றில் தெரிவித்தார்.

குடந்த 23 ஆம் திகதி இரவு 12 பேர் கொண்ட குழுவொன்று கோதமி வீதியிலுள்ள கார் விற்பனை நிலையமொன்றுக்குச் சென்று அவ் வர்த்தக நிலையத்தையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பல கார்களையும் சேதப்படுத்தியதாக அவர் கூறினார்.

குறித்த தினத்தில் மாலைவேளையில்  மேற்படி குழுவினர் அவ்வர்த்தக நிலையத்திற்குச் சென்று கப்பம் கோரியதாகவும்; கப்பம் வழங்குவதற்கு அந்நிலையத்தின் உரிமையாளர் மறுத்தநிலையில் உரிமையாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்திவிட்டு சென்றதாகவும் அப்பொலிஸ் உத்தியோகஸ்தர் கூறினார்.

ஆத்துடன் மேலும் பல வர்த்தகர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கப்பம் பெற்றுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி குழுவின் ஏனைய அங்கத்தவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .