2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Kogilavani   / 2012 ஜூன் 28 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                            (எம்.எம்.எம்.ரம்ஸீன்)
பன்னிரண்டு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பேராதனை பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை  கைது செய்துள்ளனர்.

இச்சந்தேக நபர் கண்டி, பேராதனை, பெனிதெனிய மற்றும் கெலிஓயா பகுதிகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில்; புகுந்து பல்வேறு சந்தாப்பங்களில் இலத்திரணியல் உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜாலிய ஹீன்கந்தவுக்கு கிடைத்த தகவலின் பேரில்; சந்தேக நபரை ஹிந்தகல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

சந்தேக நபர் கண்டி நீதவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .