2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அழுகிய நிலையில் பளையில் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பளை, புதுக்காடு, மாசார் கிராமத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பு ஒன்றில் அழுகிய நிலையில் காணப்பட்ட ஆணொருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாசார் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ராசரத்னம் கருணாகரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சுமார் 3 நாட்களுக்கு முன்னர் இவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் இவரது மரணம் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .