2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கேகாலை தேவாலேகம பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்துள்ளதாக  கேகாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவத்தில் பலியான  42 வயதுடைய மேற்படி பெண்ணின் சடலம்  தற்போது கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி கொலையை புரிந்ததாக தெரிவிக்கப்படும் கணவர் தப்பியோடியுள்ள நிலையில்; இவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .