2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மனைவியை கணவர் கூரிய ஆயுதமொன்றினால் வெட்டி கொலை

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

வாகரை பிரதேசத்தில் மனைவியை கணவர் கூரிய ஆயுதமொன்றினால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை கல்லறுப்பு வெருகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காளி கோயில் வீதி கதிர வெளியை சேர்ந்த 55 வயதான பூரணம் நடராசா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கிடையே இடம்பெற்ற குடும்ப தகராறு காரணமாகவே இககொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணை வாழைச்சேனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இராணுவத்தினரினால் எடுத்துச் செல்லப்படட போது உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் தற்போது தலைமறைவாகி உள்ள நிலையில் வாகரை பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பதில் பொலிஸ பொறுப்பதிகாரி ஜ.பி. ஜெயசீலன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .