2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தாயைக் கம்பியால் தாக்கிய மகன் கைது

Super User   / 2012 ஜூலை 02 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

தாயை கம்பியால் தாக்கிய மகனை கைது செய்துள்ளதாக அச்சுவேலி  பொலிஸார் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.

காணியை விற்று தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தாயிடம் வற்புறுத்தி போது தாயர் மறுப்பு தெரிவித்தமைக்காகவே  கம்பியினால் தாக்கிக் காயப்படுத்தி விட்டு தலைமறைவாகியுள்ளார்

தாயர் தலையில் படுகாயங்களுக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சம்பவம் தொடர்பாக தாயைத் தாக்கிய 22 வயது மகன் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்

தர்மன் இந்திரா வயது 47 என்ற தாயே மகனின் கம்பி தாக்குதலுக்கு இலக்காகியவராவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .