2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யாழ்.கரையோரப் பகுதிகளில் கடைகள் உடைக்கப்பட்டு பாரிய கொள்ளை

Kogilavani   / 2012 ஜூலை 05 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)
யாழ்.குருநகர் மற்றும் பாஷையூர் கரையோரப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு கடைகள் பல உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பாக இன்று வியாழக்கிழமை காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உப பரிசோதகர் விக்கிரமாராட்சி தெரிவித்தார்.

யாழ்.கரையோரப் பகுதிகளில் கடைகள் உடைக்கப்பட்டு தண்ணீர் இறைக்கும் இயந்திரம், சீடி பிலேயர் மற்றும் பெறுமதியான இலத்திரணியல் சாதனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

பாஷையூர் கோயிலடிப் பகுதியிலுள்ள கடை மற்றும் யாழ்.குருநகர் றெக்கிள மேஷன் வீதி, தண்ணீர்தாங்கி வீதி, மவுண்கார்மேல் வீதிகளில் உள்ள கடைகள் உடைக்கப்பட்டு கடையில் இருந்து பெறுமதிவாந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பொலிஸ் நிலைய உப பரிசோதகர் விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .