2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காஸ் சிலிண்டர்களிலிருந்து முறைகேடாக வாயுவை அகற்றிவந்த குழுவினர் கைது

Super User   / 2012 ஜூலை 05 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                         (சுபுன் டயஸ்)

லித்ரோ காஸ் கம்பனியினால் வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர்களிலிருந்து குறைந்தபட்சம் 3 கிலோ எடையுள்ள எரிவாயுவை நீக்கவிட்டு வெற்று சிலிண்டர்களுக்கு புதிய சீல் வைத்து மூடும் மோசடியில் ஈடுபட்டுவந்த குழுவொன்றை வெல்லம்பிட்டியில்  பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

3 பேர் கொண்ட இக்குழுவினர் 12.5 கிலோ எடையுள்ள சிலிண்டர்களிலிருந்து, கடந்த 6 மாத காலமாக இவ்வாறு எரிவாயுவை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காஸ் சிலிண்டர்களின் சீல்களை திறப்பதற்காக இவர்களுக்கு பிரத்தியேக கருவிகள் வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினார். இச்சந்தேக நபர்கள் விரைவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .