2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஊர்காவற்றுறையில் வெட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 06 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையின் நாரந்தனைப் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையொன்றில்; வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞரொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

நாராந்தனை பகுதியைச் சேந்த செல்வராசா அனுஜன் (வயது 26) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கள்ளுத் தவறனையில் இருவருக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு மோதலாக மாறியதாகவும் இதன்போது இவ்விளைஞர் கூரிய ஆயுதத்தினால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும்  அவரைக் தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் சடலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இச்சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தினால்; வெட்டப்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .