2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சுன்னாகம் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 06 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்த ஒருவருடைய சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். சுன்னாகம், மேற்கு கொத்தியவத்தை பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த சின்னத்துரை பாலசுப்பரமணியம் (வயது 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து வழங்கப்பட்ட தகவலுக்கமைய சுன்னாகம் பொலிஸாரால் இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .