2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் புத்தூரில் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 08 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணம், புத்தூரிலுள்ள கிந்துசிட்டிப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சில நேற்று சனிக்கிழமை இரவு  7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.

கிந்துசிட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றின் வளாகத்திலிருந்து இவ்வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.

இவ்வீட்டு உரிமையாளர் குளிப்பதற்காக கிணற்றடிக்குச் சென்றபோது துப்பாக்கி தோட்டாவொன்றைக் கண்டதாகவும்  அத்தோட்டவை எடுத்தபோது நிலத்திலிருந்து பல தோட்டாக்கள் கோர்வையாக வெளியில் வந்ததாகவும் அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.

இதனைத் தொடர்ந்து இவ்வீட்டு உரிமையாளரினால் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த இடத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்று வெடிபொருட்களை மீட்டதாகவும் இதன்போது தோட்டாக்கள், 2 மகசீன்கள், ஒரு கிரைனேட், ஒரு வோக்கிரோக்கி ஆகியன மீட்கப்பட்டதாகவும் அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .