2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 08 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சிறுமியொருவரை  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்  63 வயதான ஒருவர் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று முதலாம் பிரிவிலுள்ள 11 வயதான இச்சிறுமி நேற்று சனிக்கிழமை முற்பகல் அருகிலுள்ள கடையில் உணவு  வாங்குவதற்காகச்  சென்றபோது அச்சிறுமியை கடை உரிமையாளர் கடையினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் இது தொடர்பில் இச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
 
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X