2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்றில் வானின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 09 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, அக்கரைப்பற்று கோளாவில் மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்ட வான் ஒன்றின் மீது நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைக்குண்டு தாக்குதல் காரணமாக வான் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் இவ்வேளையில்  ஆலயத்திற்கு வழிபடுவதற்காக நேற்றிரவு 10.40 மணியளவில் வானில் வந்த அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த மர ஆலை உரிமையாளர் ஒருவர் வானை
நிறுத்திவிட்டு ஆலயத்திற்கு வழிபடுவதற்குச் சென்றதாகவும் இதன்போது வானின் மீது இனந்தோரியோதாரினால் கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறப்பிட்டனர்.

மர ஆலையின் உரிமையாளரின் வானை இலக்குவைத்தே கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .