2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவி மீது துஸ்பிரயோகம்; இராணுவ வீரர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 09 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவியொருவரை வழிமறித்து காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்றுள்ள இராணுவ வீரர் ஒருவர், அம்மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த வேலை பொதுமக்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கபுர பிரதேச காட்டுப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவ்வழியாகச் சென்ற பஸ்ஸில் பயணித்த பயணிகளே சம்பவத்தை நேரில் கண்டு சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த மாணவி, சைக்கிளொன்றில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது அவரது சைக்கிளை மோதி மாணவியை கீழே விழுத்தியுள்ள சந்தேகநபர் பின்னர் அவரை காட்டுக்குள் இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் குறித்த சந்தேகநபர் வெலிகந்த இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
   
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • annoninose Monday, 09 July 2012 02:54 PM

    வேலியே பயிரை மேய்கின்றது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .