2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் வீட்டினை உடைத்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் கைது

Kogilavani   / 2012 ஜூலை 11 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                             (ஜெ.டானியல்)
யாழ்.ஆனைப்பந்தியில் உள்ள வீடு ஒன்றுக்குள் மோட்டர் சைக்கிளில் வாள்கள் பொல்லுகளுடன் சென்று வீட்டினை உடைத்த குற்றச்சாட்டின் கீழ் பாடசாலை மாணவர்கள் மூவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.ஆனைப்பந்தியிலுள்ள வீடு ஒன்றினுள் கடந்த 4ஆம் திகதி முகத்தை துணியினால் கட்டியவாறு மதுபோதையில் வாளுடன் சென்று வீட்டின் கதவு மற்றும் கண்ணாடிகளை உடைத்துள்ளதாக வீட்டின் உரிமையாளரினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த பாடசாலை மாணவர்கள் மூவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்கள் மூவரும் நாளைய தினம் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .