2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வென்னப்புவவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 13 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

வென்னப்புவ நைனாமடம் பிரதேச காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையமொன்று  விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதன்போது கைப்பற்றப்பட்ட 800,000 ரூபா பெறுமதியான பொருட்களையும்  கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் விசேட அதிரடிப்படையினர் வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

2 படகுகள்,  38 கோடா பரல்கள், 13 செப்புக்கம்பிச் சுருள்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .